பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை….! கடும் வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் 625 பேருக்கு உடல்நலக்குறைவு….! 9 பேர் கவலைக்கிடம்…. வெளியான தகவல்….!! 

Estimated read time 1 min read

ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயில் 148 ஆவது ரத யாத்திரை நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த யாத்திரையில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கானோர் வந்தனர். ரத யாத்திரை நடந்து கொண்டிருந்தபோதே அதில் பங்கேற்ற 18 யானைகளில், 3 யானைகள் மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் வனத்துறையினரும் அதிகாரிகளும் மிரண்டு ஓடிய யானைகளை கட்டுப்படுத்தியுள்ளனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த நிலையில் ரத யாத்திரையில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்டவர்கள் நெரிசலில் சிக்கி காயமடைந்தனர். அவர்கள் தற்போது அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ரத யாத்திரையில் பங்கேற்ற 625 பேருக்கு கடும் வெப்பம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் ஆபத்தான நிலையில் உள்ள 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author