சீனாவின் சிங்காய் மாகாணத்தின் டொங்தே மாவட்டத்தில், 2023ஆம் ஆண்டு முதல், தெளிந்த நீர் மற்றும் பசுமை மலை தங்கம் போன்ற மதிப்புமிக்கது என்ற பசுமை வளர்ச்சிக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் தளம் உருவாக்கப்பட்டது.
அதற்கு ஏற்ப, இயற்கைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு, சூழலியல் சுற்றுலா ஆகியவற்றை ஒருங்கிணைத்து வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
பீடபூமியின் இயற்கைச் சூற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, டொங்தேவில் இயற்கை பாதுகாப்புத் தளத்தின் முன்மாதிரி உருவாக்கப்பட்டு வருகிறது.
‘தாய் ஆறு’ என அழைக்கப்படும் மஞ்சள் ஆற்றின் நீர் ஓட்டம், ஸிசாங்தான்சியா தேசிய நிலவியல் பூங்காவின் சிவப்புநிற நிலப்பரப்பு, பரந்தப்பட்ட புல்வெளியில் கருப்பு மாடுகள் மற்றும் வெள்ளைநிற ஆட்டுக் கூட்டம், பசுங்காடுகள், வயல்களில் மஞ்சள்நிற கடுகு மலர் மற்றும் காய்கறிச் செடிகள் போன்றவை கண்கொள்ளா காட்சியைக் கண்டுரசிக்கலாம்.
கடல் மட்டத்தில் இருந்து 3 கிலோமீட்டர் உயரத்தில் வண்ண வண்ணமான பீடபூமிக் காட்சி, மனிதன்கள் இயற்கையோடு இணக்கமாக வாழ்ந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.