நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ சேவைகள் மட்டுமே ஆகஸ்ட் 12ஆம் தேதி நாளை நிறுத்தப்படும் என்று குடியுரிமை மருத்துவர்கள் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குடியுரிமை மருத்துவர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி கொல்கத்தாவில் ஜூனியர் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை அனைத்து மருத்துவமனைகளிலும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ சேவைகள் இடைநிறுத்தப்படும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.