சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஆகஸ்ட் 11ஆம் நாள் ஈரான் தற்காலிக வெளியுறவு அமைச்சர் பாகேரியுடன் தொலைபேசி மூலம் பேசினார்.
வாங் யீ கூறுகையில், சீனாவும் ஈரானும் பன்முக நெடுநோக்கு கூட்டாளிகளாகும். ஈரானின் புதிய அரசுடன் இணைந்து, பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையேயான எதார்த்தமான ஒத்துழைப்புகளை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடப்பு தலைவர் பதவி வகிக்கும் நாடான சீனா நடத்தும் நிகழ்ச்சிகளில் ஈரான் பங்கெடுப்பதை சீனா வரவேற்கிறது. ஈரானுடன் பிரிக்ஸ் அமைப்பு முறையின் கட்டுக்கோப்புக்குள் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்,
பாகேரி கூறுகையில், ஈரான் அரசுத் தலைவர் பேசேஷிகியன் ஈரான்-சீன உறவை வளர்க்க உறுதியுடன் பாடுபட்டு வருகிறார். சீனாவுடன் இணைந்து சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் குறித்து ஒருங்கிணைப்பை வலுப்படுத்த ஈரான் விரும்புகிறது என்று தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நிலைமை குறித்து இரு தரப்பினரும் முக்கியமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். வாங் யீ கூறுகையில், பல்வேறு தரப்புகள் தன் சட்டப்பூர்வ நலன்களைப் பேணிகாப்பதை சீனா ஆதரிக்கிறது. குறிப்பாக பாலஸ்தீனம் தேசிய சட்டப்பூர்வ உரிமையை மீட்பதை ஆதரிக்கிறது என்று தெரிவித்தார்.