கோலிவுட் நடிகரும் இயக்குனருமான தனுஷ் சமீபத்தில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ₹25 லட்சத்தை வழங்கியுள்ளார்.
ஜூலை 30 அன்று ஏற்பட்ட இந்த பேரழிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனுஷ் இந்த பேரழிவை எதிர்கொள்வதற்காக, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ₹25 லட்சம் நன்கொடை அளித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னதாக, விஜய், நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன், பிரபாஸ், அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, ராம் சரண், ராஷ்மிகா மந்தனா, மம்முட்டி மற்றும் மோகன்லால் உள்ளிட்ட பலரும், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.