மத்திய அரசு தற்போது IT-க்கு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது மருத்துவமனைகள் மற்றும் ஹோட்டல்களில் ரூ.2 லட்சத்திற்கு மேல் பண பரிவர்த்தனைகள் நடந்தால் அது தொடர்பாக அரசுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதாவது பான் கார்டு நம்பர் இல்லாமல் மிகப் பெரிய அளவில் பணப்பரிவர்த்தனை நடைபெறும் போது முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.
எனவே ரூ.2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டால் உடனடியாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதோடு பான் கார்டு நம்பர் இல்லாமல் மிகப் பெரிய அளவில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறக்கூடாது.
மேலும் இந்த விதிகளை பின்பற்றுவதில்லை என்று தற்போது அரசுக்கு புகார் வந்துள்ளதால் ரொக்க பரிவர்த்தனை குறித்து அரசு தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளது