குறைந்தது தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனையாகிறது.

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக, ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.

அதன் பிறகு, தங்கத்தின் விலையானது படிப்படியாக உயர தொடங்கியது. நேற்றைய தினம் (திங்கட்கிழமை) எந்த வித மாற்றம் இல்லாமல் விற்பனை ஆனது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (20-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,280-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,660-க்கும் விற்பனையாகிறது.

24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56,920 ஆகவும் கிராம் ஒன்று ரூ.7,115 ஆகவும் விற்பனையாகிறது. அதே போல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.92க்கும், ஒரு கிலோ ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You May Also Like

More From Author