9-ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி பிப்ரவரி 7ஆம் நாள் சீனாவின் ஹெலுங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் நகரில் துவங்கியது.
இதில் வரலாறு காணாத அளவில் 34 ஆசிய நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 1270-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
அமைதி மற்றும் நிலையான கூட்டு கனவைப் பேணிக்காப்பது, செழுமையான வளர்ச்சி பற்றிய கூட்டு எதிர்பார்ப்பில் நிலைத்து நிற்பது, ஒன்றுடன் ஒன்று இணையும் கூட்டு விருப்பத்தை நனவாக்குவது ஆகிய சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மூன்று முன்மொழிவுகள், இந்த விளையாட்டுப் போட்டி மீதான எதிர்பார்ப்பை வெளிகாட்டுகின்றன. சீனாவைக் கடந்து வேறு நாடுகள் அல்லது பிரதேசங்களுக்குச் செல்லும் போது, 240 மணி நேரம் விசா இன்றி தங்கலாம் என்ற கொள்கையால், ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த விளையாட்டுப் போட்டியை கண்டு ரசிக்க சீனாவுக்கு வருகின்றனர். இது உலக சுற்றுலா சந்தைக்கு உந்து சக்தியை வழங்கியுள்ளது.
இதே வேளையில், இந்த விளையாட்டுப் போட்டி, ஆசிய நாகரிக பரிமாற்றத்தின் மேடையாகவும் மாறியுள்ளது. ஹார்பின் ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டியின் மூலம், திறப்பு, உற்சாகம், நவீனம் ஆகியவற்றைக் கொண்ட சீனாவை உலகமும் ஆசியாவும் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.