மார்ச் 1-ஆம் தேதி முதல் ரூ.5000 உயர்வு… தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு..!! 

Estimated read time 1 min read

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த ஊதிய உயர்வு வரும் மார்ச் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் பணியாற்றும் சுமார் 9,646 ஆசிரியர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பின்படி, கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது:

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3,000-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். முதுகலை, பிஎச்டி முடித்து, நெட் (NET) மற்றும் ஸ்லெட் (SLET) தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற இவர்களுக்கு இதுவரை ரூ.25,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு ஆண்டுக்கு 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. மே மாத ஊதியம் கிடையாது. மகப்பேறு விடுமுறை போன்ற அடிப்படை சலுகைகள் இல்லை. பி.எஃப். (PF) மற்றும் இ.எஸ்.ஐ. (ESI) போன்ற பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறையில் இல்லை.

மேலும் உதவிப் பேராசிரியர் பணி நியமனத்தில் பழைய முறைப்படி (நேர்காணல் மற்றும் பணி அனுபவம்) முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், யுஜிசி விதிமுறைப்படி ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவர்களின் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த ஊதிய உயர்வை அரசு அறிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author