தமிழகமே கண்ணீர் மல்க பிரியாவிடை…. 72 குண்டுகள் முழங்க ஐயா நல்லகண்ணுவுக்கு அரசு மரியாதை….!! 

Estimated read time 0 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எளிமையின் சிகரமுமான ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது, உணர்ச்சி ததும்ப “வீர வணக்கம், வீர வணக்கம்” என்று வீர முழக்கமிட்டு முதலமைச்சர் தனது மரியாதையைச் செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, நல்லகண்ணு அவர்களின் தன்னலமற்ற பொதுவாழ்வைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. காவல்துறையினரின் 72 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீருடன் இந்த மக்கள் தலைவனுக்குப் பிரியாவிடை அளித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author