ராஜஸ்தானில் ஏற்பட்ட கனமழை… வெள்ளத்தால் 2-ஆக பிளந்த சாலை… 35 அடி ஆழத்தில் பயங்கர பள்ளம்… பார்க்கவே பயங்கரமா இருக்கே….!! 

Estimated read time 1 min read

ராஜஸ்தான் மாநிலம் ஜின்ஜினு மாவட்டத்திலுள்ள பகோலி – ஜார்ஜ் ஆகிய பகுதிகளுக்கு இடையே தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த மாவட்டத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கனமழை பெய்ததால் அப்பகுதி முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

எனவே பகோலி-ஜார்ஜ் இடையே புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் சாலை இரண்டாகப் பிளந்து சாலைகளுக்கு நடுவில் 30 முதல் 35 அடி ஆழம் கொண்ட பள்ளம் தோன்றியது.

மிகவும் தரமற்ற முறையில் இந்த சாலைகள் அமைக்கப்பட்டதால் தான் திறப்பதற்கு முன்பே வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனை அப்பகுதியே சேர்ந்த  சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author