திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தின் நிர்வாகிகள் தற்போது அறிவிப்பு ஒன்றை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
அக்டோபர் 3ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற இருப்பதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரம்மோற்சவத்தின் போது சாமி தரிசனத்தை பார்க்க பக்தர்கள் வழக்கத்தை விட அதிகமாக வருவது வழக்கம்.
இதனால் பக்தர்கள் திருப்தியாக தரிசனம் செய்வதற்காக அக்டோபர் 3 முதல் 12 ஆம் தேதி வரை விஐபி தரிசனங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்போவதாக கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் ஒரு வயது குழந்தைகளின் பெற்றோர்கள் ஆகியோருக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டும் விஐபி தரிசனம் வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.