நேபாளத்தில் 43 இந்திய பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று நேற்று மர்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து பெரும் விபத்துக்கு உள்ளானது.
இந்த கோர விபத்தில் நேற்று 14 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் கிரீஸ் மகாஜன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து முதற்கட்டமாக 24 பேரின் உடல்கள் இந்தியா கொண்டுவரப்பட்டு குடும்பத்தாரும் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நேபால் பேருந்து விபத்தில் இந்திய பயணிகள் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.