செப்டம்பர் 20ஆம் நாள் வரை, 22ஆவது சீனா-ஆசியான் கண்காட்சியிலும் சீனா-ஆசியான் வணிக மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டிலும் பெறப்பட்டுள்ள 700க்கும் அதிகமான சாதனைகளில், 500க்கும் மேற்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தகத் திட்டங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
மேலும், பல துறைகள் மற்றும் பல வடிவங்களில் 270க்கும் மேற்பட்ட சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன என்று இக்கண்காட்சி மற்றும் உச்சி மாநாடு பற்றிய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.
நடப்பு சீனா-ஆசியான் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட உயர் புதிய தொழில் நுட்ப தயாரிப்புகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்து, மொத்த தயாரிப்புகளிலும் செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய தயாரிப்புகளின் விகிதம் 50விழுக்காட்டைத் தாண்டியது என்று தெரிவிக்கப்பட்டது.