ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் நிறைவு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங் மற்றும் ஓட்டப்பந்தய வீராங்கனை ப்ரீத்தி பால் ஆகியோர் தேசியக் கொடி ஏந்தி இந்திய அணியின் அணிவகுப்பிற்கு தலைமையேற்ற உள்ளனர்.
33 வயதான ஹர்விந்தர், பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற முதல் இந்திய வில்வீரர் என்ற பெயரை வரலாற்றில் பொறித்துள்ளார்.
மேலும் 2021இல் டோக்கியோவில் அவர் வென்ற வெண்கலத்தையும் சேர்த்தார். தேசியக் கொடி ஏந்தும் வாய்ப்பு குறித்து பேசிய ஹர்விந்தர், “இந்தியாவுக்காக தங்கம் வெல்வது ஒரு கனவு நனவாகிவிட்டது.
இப்போது நிறைவு விழாவில் கொடி ஏந்தியவனாக நம் தேசத்தை வழிநடத்துவது நான் கற்பனை செய்யக்கூடிய மிக உயர்ந்த கவுரவம்.” என்று கூறினார்.