தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் சிபிஐ வசம் ஒப்படைத்து நிலையில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் தற்போது விஜய்க்கு இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் விஜய் ஜனவரி 12ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் நாளை அவர் டெல்லி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் நாளை காலை 7:00 மணிக்கு அவர் டெல்லிக்கு புறப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

