கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றால் கூட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Estimated read time 0 min read

கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றால்கூட, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து நடத்தும் நிலை உள்ளதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியளித்தார் .

அப்போது, திண்டுக்கல் மாவட்டம் பத்மகிரீஸ்வரர் அபிராமன் அம்மன் 238 ஆண்டுக்கு முன்பு திப்பு சுல்தான் காலத்தில் விக்ரகம் மேல உள்ள மலை கோவிலில் வைக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் சுமார் 27 ஆயிரம்  பேரிடம்  கையெழுத்து வாங்கி ஆளுநரிடம் வழங்கி உள்ளோம் என தெரிவித்தார்.

அரசு கடவுள் நம்பிக்கை இல்லாத அரசாக உள்ளது. பல கோவில்களில் மரம் முளைத்து பராமரிப்பு இல்லாமல் உள்ளது. எனவே அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என இந்து முன்னணி போராடி வருகின்றனர்

பழனி கோவிலில் ஏராளமான குறைகள் உள்ளன. நன்கொடையாக வழங்கும் பசுக்களை முறையாக பாதுகாப்பது இல்லை என்றும் அவர் கூறினார்.

முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். விஜயும் வாழ்த்து சொல்லவில்லை போகப்போக அவரின் நடவடிக்கை தெரியும் என காடேஸ்வரா சுப்ரமணியன் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author