விண்ணில் ஏவப்பட்ட சீனாவின் 59ஆவது மற்றும் 60ஆவது பெய்தொவ் செயற்கைக்கோள்கள்

Estimated read time 1 min read

 

சீனாவின் சிச்சாங் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து, லாங்மார்ச்-3 பீ ஏவூர்தி மற்றும் யுவான்ஜெங்-1 மூலம், சீனாவின் பெய்தொவ் வழிக்காட்டு அமைப்பின் 59ஆவது மற்றும் 60ஆவது செயற்கைக்கோள்கள் செப்டம்பர் 19ஆம் நாள் காலை விண்ணில் ஏவப்பட்டன. 

பெய்தொவ் அமைப்புக் கட்டுமானத்தின் “மூன்று-படி அணுகுமுறை” என்பது பல்வேறு கட்டங்களில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சியின் நடைமுறையுடன் இணைந்து முன்வைக்கப்பட்ட வளர்ச்சி பாதையாகும்.

முதலாவதாக, புதிய செயற்கைக்கோள்களுக்கான வழிசெலுத்தலை உணர பெய்தொவ்-1 அமைப்பு உருவாக்கப்பட்டது. இது பெய்தொவ் செயற்கைக் கோள் வழிசெலுத்தல் சோதனை அமைப்பு என்றும் அழைக்கப்படும்.

இரண்டாவதாக, பெய்தொவ்-2 அமைப்புக் கட்டுமானத்தின் மூலம், செயலில் நிலைநிறுத்துதல் என்ற தொழில் நுட்பத்திலிருந்து செயலற்ற நிலையில் நிலைநிறுத்துதல் என்ற தொழில் நுட்பத்துக்கு வரை பிரதேச வழிசெலுத்தல் ஆசிய-பசிபிக் பிரதேசத்திற்குச் சேவை செய்கின்றது.

மூன்றாவது, பெய்தொவ்-3 அமைப்புக் கட்டுமானத்தின் மூலம் செயற்கைக்கோள்களுக்கிடையிலான இணைப்பை உருவாக்கி, உலக வழிக்காட்டு அமைப்பு நனவாக்கப்பட்டது.

2035ஆம் ஆண்டுக்குள், மேலும் நிறைந்த, ஒருங்கிணைந்த மற்றும் புத்திசாலித்தனமான ஒட்டுமொத்த விண்வெளி அமைப்பையும் சீனா உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author