பட்டாசு ஆலை பயங்கர வெடி விபத்து.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிதி உதவி அறிவிப்பு..!! 

Estimated read time 0 min read

விருதுநகர் மாவட்டத்திலுள்ள குகன்பாறை செவல்பட்டு கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார்.

இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று காலை தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக உராய்வால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீ பரவி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் கட்டிடம் இடிந்து தரைமட்டமாகி மருந்து கலவையில் ஈடுபட்ட கோவிந்தராஜ் என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார்.

மேலும் குருமூர்த்தி என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் முதலமைச்சர் ம. க ஸ்டாலின் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த கோவிந்தராஜ் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் 3 லட்ச ரூபாயும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் குருமூர்த்தியிக்கு 2 லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author