இளநிலை பட்டதாரிகளுக்கான இந்த பணிகளில் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பணி இன்று முதல் தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் RRB அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள 3,445 பணியிடங்களுக்கான நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தேர்வு தொடர்பான அனைத்து தகவல்களும் விண்ணப்பதாரர்களின் மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரிக்கு மட்டுமே அனுப்பப்படும்.
எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் இளைஞர்கள், தகுதி நிபந்தனைகளை படித்து, உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.