இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்கும் அனுர குமார திசநாயக்க… இவர் யார் தெரியுமா…? 

Estimated read time 0 min read

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ராஜபக்சே ஆட்சி வீழ்ச்சி அடைந்தது. இதனால் கேத்தபயே ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்ற மூலம் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் மொத்தம் உள்ள 22 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் அனுர குமார திசநாயக்க முன்னிலை வகிக்கிறார். இதில் 18 மாவட்டங்களில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கையின் அடுத்த அதிபராக அவர் பொறுப்பேற்பது உறுதியாகிவிட்டது. இதுவரை எண்ண பட்டதில் 53.43 சதவீத வாக்குகளை தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திஷநாயக்க பெற்றுள்ளார்.

தற்போது இவரைப் பற்றி சில தகவல்களை பார்ப்போம். இவர்களது 1968 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்தவர்.

கடந்த 1987 ஆம் ஆண்டு ஜனதா விமுக்தி பெருமுனாவில் இணைந்த அவர் தற்போது அதன் தலைவராக இருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் 3.16 சதவீத வாக்குகளை பெற்று அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மாபெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார்.

16 மணி நேரத்திற்கு மேலாக சாதாரண மக்கள் மின்சாரம் மற்றும் எரிபொருள் இல்லாமல் தவிக்கிறார்கள் என்ற மக்கள் ஆதங்கத்தை உரக்க ஒலித்தவர்.

அதோடு மக்கள் நலனுக்காக அந்த சமயத்தில் கடுமையாக பாடுபட்டதால் அவர் மீது மதிப்பு கூடியது. இவருக்கு இலங்கையின் தென்பகுதியில் மட்டும் இன்றி தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் ஆதரவு அமோகமாக இருக்கிறது. மேலும் மாற்றத்துக்காக தற்போது புதிய அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுத்து அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஓட்டு போட்டுள்ளனர். இவர் அடுத்த அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார்.

மேலும் தற்போது அதிபராக உள்ள ரணில் விக்கிரமசிங்கே 18. 99 சதவீத வாக்குகளும், சஜித் பிரேமதாசா 21.79 சதவீத வாக்குகளும் பயிற்சி பின்னடைவை சந்தித்துள்ளனர். பொதுவாக 50 சதவீத வாக்குகளை பெற்றாலே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு விடுவார். அந்த வகையில் 50 சதவீத வாக்குகளை அனுரகுமார திசாநாயக்க தாண்டியதால் இலங்கையின் அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author