மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று தீவிரவாதிகள்

கடந்த மார்ச் 23 அன்று, மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் மற்றும் இசை அரங்கில் தாக்குதல் நடத்தி, 133 பேரைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களில் மூன்று பேர், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானபோது அவர்கள் இந்த படுகொலையில் ஈடுபட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
தஜிகிஸ்தான் குடிமக்களான நான்கு பேரையும் மே 22 வரை விசாரணைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் IS பயங்கரவாதக் குழுவின் பிராந்தியப் பிரிவான, IS-கொரசன் பொறுப்பேற்றுக்கொண்ட இந்த தாக்குதலில் ஈடுபட்டதற்காக, ஏழு பேர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அதில் இந்த சந்தேக நபர்கள் நால்வரும் அடங்குவர்.

You May Also Like

More From Author