விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது, பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.
பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தும் பணத்தை எண்ணும் பணிகள், கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கோவிலில் உள்ள 15 உண்டியல்களின் மூலம் 44 லட்சத்து, 26 ஆயிரத்து, 022 ரூபாய் பணமும், 135 கிராம் தங்கமும், 944 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக கிடைத்துள்ளது.
உண்டியல் பணம் எண்ணும் பணிகளை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் நாராயணன், உதவி ஆணையர் சுரேஷ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
காணிக்கை எண்ணும் பணிகளில் ஓம்சக்தி பக்தர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.செய்தியாளர் வி காளமேகம்