இவ்வாண்டின் முற்பாதியில் சீனாப் பொருளாதாரம் பற்றிய தரவுகளை சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 15ஆம் நாள் வெளியிட்டுள்ளது. பயனுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான ஒட்டுமொத்த கொள்கைகளைச் சீனா நடைமுறைப்படுத்தியுள்ளதோடு, இவ்வாண்டின் முற்பாதியில் சீனப் பொருளாதாரம் நிதானமாக வளர்ந்துள்ளது. முதற்கட்டத் தகவல்களின்படி, இவ்வாண்டு முற்பாதியில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 66லட்சத்து 5360கோடி யுவானை எட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட, இது 5.3விழுக்காடு அதிகரித்துள்ளது.
அவற்றில் முதன்மை தொழில் 3.7விழுக்காடு, இரண்டாவது தொழில் 5.3விழுக்காடு, மூன்றாவது தொழில் 5.5விழுக்காடு அதிகரித்துள்ளன.
மேலும், இக்காலக்கட்டத்தில் நாட்டின் நிலையான இருப்பு முதலீட்டுத் தொகை 24லட்சத்து 86ஆயிரத்து 540கோடி யுவானைத் தாண்டி கடந்த ஆண்டை விட, 2.8விழுக்காடு அதிகமாகும். நாடளவில் நபர்வாரி செலவழிக்கக்கூடிய வருமானம் 18ஆயிரத்து 186யுவானை எட்டி 4.8விழுக்காடு அதிகரித்துள்ளது.