பல்வேறு ஜனநாயக கட்சிகளின் மத்திய கமிட்டிப் பொறுப்பாளர்கள், அனைத்து சீனத் தொழிற்துறை மற்றும் வணிகத் துறை சம்மேளனத்தின் பொறுப்பாளர்கள், கட்சி சாரா பிரமுகர்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் கலந்துரையாடல் கூட்டத்தை, சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஜனவரி 26ஆம் நாள் பிற்பகல் நடத்தினார். அரசுப் பணியறிக்கை மற்றும் 15வது ஐந்தாண்டுத் திட்டவரைவுத் தீர்மானம் பற்றிய கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் இக்கூட்டத்தில் கேட்டறியப்பட்டன.
இவ்வாண்டு மற்றும் 15வது ஐந்தாண்டுத் திட்டவரைக் காலத்தில், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிப் பணியில் செவ்வனே ஈடுபடுவது, ஒட்டுமொத்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவது, உள்நாட்டுச் சந்தையைக் கட்டியமைப்பது, புதிய உயர்தர உற்பத்தித் திறனை வளர்ப்பது, சீர்திருத்தத்தை ஆழமாக்கி வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்குவது, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது முதலியவை குறித்து, இக்கூட்டத்தில் பங்கெடுத்த பிரதிநிதிகள் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை வழங்கினர்.
பல்வேறு ஜனநாயக கட்சிகள், தொழிற்துறை மற்றும் வணிகத் துறை சம்மேளனம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும், கட்சி சாரா பிரமுகர்களும், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் நிலவிய முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை ஆக்கமுடன் வழங்க வேண்டும் என்று லீ ச்சியாங் விருப்பம் தெரிவித்தார்.
