இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர்கள் விரைவில் ஏற்றுமதி செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வரும் 6-ஆம் தேதி வரை பசுமை எரிசக்தி உள்ளிட்ட கருப்பொருளை அடிப்படையாக கொண்டு கெளடில்யா பொருளாதார மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாட்டின் தொடக்க நாளில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ஏஐ மற்றும் செமிகண்டக்டர்கள் போன்ற முக்கிய தொழில்நுட்பங்களில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது என தெரிவித்தார்.
இந்தியாவில் செயல்படும் 5 ஆலைகளும், விரைவில் செமிகண்டக்டர்களை உலகிற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கும் எனவும் கூறினார். மேலும் 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டின் தரவரிசையில் இந்தியா 81-வது இடத்தில் இருந்து 39-வது இடத்தை எட்டியுள்ளது எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.