தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடலோர பகுதிகளை அடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டிசம்பர் 17-ஆம் தேதி தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.