காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது தனித்துவமான பாணியில் தனது பைகளுடன் அறிக்கைகளை வெளியிடுவதை தொடர்ந்து வருகிறார்.
இன்று (டிசம்பர் 17) “வங்காளதேசத்தின் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடன் நாங்கள் நிற்கிறோம்” என்று எழுதப்பட்ட பையை ஏந்தியபடி அவர் நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
நேற்று பிரியங்கா காந்தி “பாலஸ்தீனம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஒரு பையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
அவரது தனித்துவமான பைகள் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.
நேற்று பாலஸ்தீனம் பொறித்த பையினை அவர் எடுத்த வந்ததற்கு பாகிஸ்தானின் அமைச்சர் பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.