100-வது ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் – வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் என பிரதமர் மோடி புகழாரம்!

Estimated read time 1 min read

ஆர்எஸ்எஸ் 100-வது நிறுவன தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இது வரலாற்று மைல்கல் என்று தெரிவித்துள்ளார்.

1925 இல் உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ், பாஜகவின் கருத்தியல் வழிகாட்டியாகக் கருதப்படுகிறது, மேலும் அதன் தொண்டர்கள் பல தசாப்தங்களாக அதன் நிறுவன வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொடர்ச்சியான பயணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியிருக்கும் நிலையில், அதன் தொண்டர்களுக்கு  வாழ்த்துகளை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது.குறித்த எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின்  வருடாந்திர விஜயதசமி உரையின் இணைப்பைப் பகிர்ந்துள்ளார், அதைக் கண்டிப்பாகக் அனைவரும் கேட்க வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்துத்துவா அமைப்பைப் பாராட்டி, பாஜகவில் சேர்வதற்கு முன்பு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்த மோடி, ‘மா பாரதி’க்கான அதன் உறுதியும் அர்ப்பணிப்பும் ஒவ்வொரு தலைமுறையையும் ஊக்குவிப்பதாகவும், ‘விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைவதில் புதிய ஆற்றலைப் புகுத்துவதாகவும் கூறினார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author