மும்பையில் தைவான் தூதரகம் அமைப்பு…. இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா…!! 

Estimated read time 1 min read

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் கடந்த சில ஆண்டுகளில் மேலும் அதிகரித்துள்ளது. தைவான் தனி நாடாக இருப்பதை அங்கீகரிக்க சீனா எவ்விதத்திலும் தயாராக இல்லை.

இதனால், தைவானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கையில் சீனா ஈடுபட்டு வருகிறது. அண்மையில், சீன ராணுவம் 125 போர் விமானங்களுடன் தைவானை சுற்றி போர்ப் பயிற்சி நடத்தி தைவானுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தைவானின் ஆதரவு நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. டெல்லி மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் தைவான் தூதரகம் உள்ள நிலையில், தற்போது மும்பையிலும் தைவான் தூதரகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர்பு சீனாவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சீன அரசு இதனை கடுமையாக கண்டித்து, தைவான் தங்கள் நாட்டின் பகுதியாக இருப்பதால், மற்ற நாடுகள் தைவானுடன் அலுவலக உறவை ஏற்படுத்தக்கூடாது என அறிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் மாவோ நியாங், இந்தியாவும் தைவானுடனான அலுவலக உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த நிலைமை, இந்தியா-சீனா இடையிலான உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளது.

China starts military drills around Taiwan, with planes and ships encircling the island.

Chinese Military launches Operation Joint Sword 2024B, launching warships and fighter jets to the north, south, east, and west of Taiwan! The island is surrounded and cut off!! Taiwan… pic.twitter.com/HJ80Or8iMY

— Boar News (@PhamDuyHien9) October 14, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author