ரஷியா இந்தியாவுடன் உறவை வலுப்படுத்துவோம்:சீனா

சீனாவுடனும் இந்தியாவுடனும் உறவை ஆழமாக்குவது ரஷிய தூதாண்மை பணியில் முன்னுரிமையுடன் கூடிய அம்சமாகும் என்று ரஷியா தெரிவித்தது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 3ஆம் நாள் கூறுகையில்,

ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, சமாதான சக வாழ்வுடன், ஒத்துழைப்பின் மூலம் கூட்டு வெற்றி பெறும் புதிய ரக உறவு வளர்ச்சிக்கு சீனாவும் ரஷியாவும் பாடுபட்டு வருகின்றன என்றார்.

சீனாவும் ரஷியாவும் இந்தியாவும், முக்கியமான வளரும் நாடுகளாகும். சர்வதேச பிரதேச நிலைமை சிக்கலாக மாறி வரும் நிலையில், ரஷியா மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து, பரிமாற்றத்தை வலுப்படுத்தி, உண்மையான பலதரப்புவாதத்தை பேணிக்காத்து, சர்வதேச அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளிக்க சீனா விரும்புகின்றது என்று அவர் தெரிவித்தார். 

Please follow and like us:

You May Also Like

More From Author