இந்தோனேசியாவின் ஜகார்த்தா-பாண்டுங் அதிவேக ரயில் சேவை அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 10 இலட்சத்துக்கும் அதிகமான பயணிகள், இந்த ரயிலில் பயணம் செய்துள்ளதாக சீன தேசிய ரயில்வே குழுமம் டிசம்பர் 25ஆம் தேதி தெரிவித்தது.
சீனா-இந்தோனேசிய ஒத்துழைப்பின் ஒரு முக்கிய திட்டமாக, 142 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ரயில்வே இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவை புகழ்பெற்ற சுற்றுலா நகரமான பாண்டுங்குடன் இணைக்கிறது. இது இந்தோனேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரயில்வே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிவேக ரயில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஜகார்த்தாவிலிருந்து பாண்டுங் வரையிலான பயண நேரத்தை 3 மணியிலிருந்து சுமார் 40 நிமிடங்களாகக் குறைக்கிறது .
அதன் செயல்பாட்டிற்குப் பிறகு, ரெயில் பெட்டிகளின் கொள்ளளவில் சராசரியாக 97 விழுக்காட்டுக்கு மேலான இருக்கைகள் நிரப்பப்பட்டுள்ளன.