“பொண்ணுங்க சிரிச்சா அழகா இருக்கும்னு சொல்லுவாங்க, ஆனா இப்போ ஒரு பையனோட சிரிப்பு ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் ஆட்டிப்படைச்சுட்டு இருக்கு.” கையில் ஒரு டீ கிளாஸை பிடித்துக்கொண்டு, மனசார சிரிக்கும் அந்தச் சிறுவனைப் பார்க்காதவர்களே இருக்க முடியாது. அவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்க, அவர் நம்ம அண்டை மாநிலமான தெலங்கானாவைச் சேர்ந்த அருண் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
மாலாப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அருண், வறுமையின் காரணமாக மிகச் சிறிய வயதிலேயே லாரி கிளீனராக வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார்.
ஒரு நாள் லாரி டிரைவர் சொன்ன ஜோக்கைக் கேட்டு, கையில் டீ கிளாஸை வைத்துக்கொண்டு அருண் விழுந்து விழுந்து சிரிக்க, அதை டிரைவர் வீடியோ எடுத்து ஆன்லைனில் போட்டுள்ளார். அந்த ஒரே ஒரு சிரிப்பு வீடியோ, அவரை ஒரே இரவில் உலகப் புகழ்பெற்ற மீம் (Meme) கிரியேட்டர்களின் ஃபேவரிட் ஆக மாற்றியது.
இப்போது பிரபலமான அருண், மீண்டும் தனது படிப்பைத் தொடர்ந்து பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். தற்போது சொந்தமாக இன்ஸ்டாகிராமில் காமெடி வீடியோக்களைத் தயாரித்து வரும் அருண், நிஜ வாழ்க்கையிலும் வெற்றிக்காகச் சிரித்துக்கொண்டே போராடி வருகிறார்.
