சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசு தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் சீனத் தேசிய இயற்கை அறிவியல் அமைப்பின் பணிகள் குறித்து முக்கிய உத்தரவிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், புதிய காலத்துகேற்ப அறிவியல் ஆய்வு பணியாளர்கள், புதிய உச்சத்தை எட்டி மேலதிக சாதனைகளைப் படைத்து, உயர்நிலை அறிவியல் தொழில்நுட்பச் சுயசார்ப்பு மற்றும் சுய வலிமையை முன்னேற்றுவதற்கும் அறிவியல் வல்லரசு கட்டுமானத்துக்கும் மேலதிக பங்கு ஆற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சீனாவின் தேசிய இயற்கை அறிவியல் அமைப்பு 1986ம் ஆண்டின் பிப்ரவரி திங்களில் நிறுவப்பட்டது. இந்நிறுவனமானது அறிவியல் ஆய்வுப் பணியாளர்கள் அடிப்படை ஆய்வுகளை மேற்கொள்வதற்குரிய முக்கிய மேடையாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.
