தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வரும் நவம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், மாணவர்கள் அரையாண்டுத் தேர்வுக்குத் தயாராகி வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில், நடப்பு கல்வியாண்டில் இருந்து 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், 2025-26 ஆம் ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
நவம்பர் 4ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்
