அமெரிக்காவில் சூறாவளியைச் சமாளிக்க வேண்டும் என்ற காரணமாக, திட்டப்படி அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் ஜெர்மனி மற்றும் அங்கோலா நாடுகளுக்கு செல்ல இருந்த பயணங்களை அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் ஒத்தி வைத்தார் என்று வெள்ளை மாளிகை சமீபத்தில் தெரிவித்தது. இதனிடையில், அங்கோலாப் பயணமானது, ஓராண்டுக்கு முன்பு பைடன் சொன்ன வாக்குறுதி ஆகும். ஆனால், பல்வகைக் காரணங்களால், இந்தப் பயணம் எப்போதும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது, பைடனின் பதவிக்காலம் 3 மாதங்களுக்குக் குறைவு ஆகும். அதேவேளையில் அமெரிக்காவில் பொது தேர்தலில் தீவிரப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனது ஆப்பிரிக்கப் பயணம் குறித்து அதிக மாற்றங்கள் எதிர்கொள்ளப்படும். இப்பயணம் போலவே, ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்காவின் வாக்குறுதிகள் அதிகம் இருந்த போதிலும், இறுதியில் அவை நிறைவேற்றப்பட முடியுமா என்பதில் அதிக சந்தேகம் உள்ளது.
அமெரிக்கா உலகின் மிகப் பெரிய உதவி நாடாக தன்னை தானே அழைக்கிறது. ஆப்பிரிக்காவுக்கான உதவி, பல்வகை பெயரில் நடைபெறுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், வெவ்வெறு அம்சங்களைக் கொண்ட உதவித் திட்டங்களை அமெரிக்கா வெளியிட்டது. நீலப் புள்ளி வலைப்பின்னல், அருமையான உலகம் மறுசீரமைப்பு, வளமான ஆப்பிரிக்க திட்டம் உள்ளிட்டவை அடக்கம். மேலும், 2022ஆம் ஆண்டு அமெரிக்க-ஆப்பிரிக்க உச்சிமாநாட்டில், ஆப்பிரிக்காவின் 2063 நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக, அமெரிக்கா 5500 கோடி அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 1500 கோடி டாலர் மதிப்புள்ள திட்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டது. பிற 4000 கோடி டாலர் மதிப்பு திட்டங்களில் பழைய ஒப்பந்தங்கள் மற்றும் முன்னெடுப்புகள் ஆகியவை மீண்டும் தொகுக்கப்பட்டன. எனவே, பொருளாதார நலன்களை விட, இந்த அறிவிப்பின் அரசியல் நோக்கம் மேலும் முக்கியமானது. இது குறித்து யூரேசியா குழுமத்தின் ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான முதன்மை ஆய்வாளர் ஆன்கு கூறுகையில், ஆப்பிரிக்காவில் அமெரிக்காவின் உதவிகளுக்கு புதிய அம்சங்கள் மற்றும் நல்லெண்ணம் பற்றாக்குறை என்று சுட்டிக்காட்டினார்.