ஓடிடியில் வெளியானது வேட்டையன் மற்றும் தேவரா!  

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த இரண்டு திரைப்படங்கள் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன், இன்று நவம்பர் 8ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.
வேட்டையன் நவம்பர் 8 முதல் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author