சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 27ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ஃபின்லாந்து தலைமையமைச்சர் ஓர்போயுடன் சந்திப்பு நடத்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்,
சீனாவுடன் தூதாண்மை உறவை மிக முன்னதாக நிறுவிய நாடுகளில் ஃபின்லாந்து ஒன்றாகும். இரு நாட்டுறவு நிறுவப்பட்ட 76 ஆண்டுகாலத்தில், சர்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், இரு தரப்புறவு எப்போது நிதானமாகவும் சீராகவும் வளர்ந்து வருகிறது.
இரு தரப்பும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, சமத்துவ முறையில் ஒன்றுடன் ஒன்று பழகி, எதிர்காலத்தைக் கூட்டாக எதிர்நோக்கி, பரஸ்பர நலன் தந்து ஒத்துழைத்து வருகின்றன. இரு தரப்பும் கூட்டு நம்பிக்கையையும் தொடர்புகளையும் வலுப்படுத்தி, ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களுக்கும் மேலதிகமான நன்மைகளைக் கொண்டு வர வேண்டும் என்றார்.
இரு தரப்புகளின் நட்புறவு வரலாற்றை அடிப்படையாக கொண்டுள்ளது. இவ்வாண்டு, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டாகும். உயர் தர வளர்ச்சியை சீனா தொடர்ந்து விரைவுபடுத்தி, வெளிநாட்டுத் திறப்பு அளவை விரிவாக்கும். இரு தரப்பும் கூட்டு நலன் தரும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, எரியாற்றல் முறை மாற்றம், சுழற்சி முறை பொருளாதாரம், வேளாண் துறை மற்றும் வனத் துறை, தொழில் நுட்பத்தின் புத்தாக்கம் உள்ளிட்டவற்றில் மேலதிகமான ஒத்துழைப்பு சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
ஃபின்லாந்து தலைமையமைச்சர் ஓர்போ கூறுகையில்,
இரு தரப்புகளின் பாரம்பரிய நட்பறவு மிகவும் வலிமையாக, ஒன்றுக்கு ஒன்று மதிப்பு மற்றும் நம்பிக்கை அளிக்கும் அடிப்படையில், நீண்டகாலமாக வளர்ந்து வருகிறது. சீனாவின் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதில் ஃபின்லாந்து நிறுவனங்கள் அதிகமான ஆர்வம் கொள்கின்றன. உயர் நிலை தொடர்புகளை வலுப்படுத்தி, வர்த்தகம், முதலீடு, எண்ணியல் பொருளாதாரம், பசுமை எரியாற்றல், வேளாண் முதலிய துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்க முயற்சி செய்ய வேண்டும். ஒரே சீனா எனும் கொள்கையில் ஃபின்லாந்து எப்போதும் ஊன்றி நிற்கும். ஐரோப்பா-சீன வர்த்தக சர்ச்சையைச் சீராகக் கையாண்டு, இரு தரப்புறவின் சீரான வளர்ச்சியை விரைவுபடுத்த ஆக்கப்பூர்வமாக பங்காற்ற விரும்புவதாகவும் ஓர்போ கூறினார்.
