மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோரை போலீசார் இன்று கைது செய்தனர்.
மத்திய அரசின் ‘MGNREGA’ (தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்) திட்டத்திற்கு ‘VB-G RAM G’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பெங்களூருவில் ‘லோக் பவன் சலோ’ (Lok Bhavan Chalo) என்ற பெயரில் பிரம்மாண்டப் பேரணி நடத்த முதல்வர் சித்தராமையா திட்டமிட்டிருந்தார்.

பேரணி தொடங்க இருந்த நிலையில், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் போலீசார் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் பிறகு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்தக் கைது நடவடிக்கை கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
