அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) சார்பில் வழங்கப்படும் H-1B விசா நேர்காணலுக்கான தேதிகள் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் 2027-ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக Livemint அறிக்கை வெளியிட்டுள்ளது.
டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள தூதரகங்களில் 2027 வரை புதிய இடங்கள் இல்லை.
ஏற்கனவே அமெரிக்காவில் பணியாற்றி வருபவர்கள், விசா முத்திரைக்காக இந்தியாவிற்கு வந்தால் மீண்டும் திரும்புவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், அவர்கள் இந்தியாவிற்கு வருவதைத் தவிர்க்குமாறு வழக்கறிஞர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது விசா வைத்திருப்பவர்கள் வேலை மாற விரும்பினால் அல்லது புதியவர்கள் வேலை தேடிச் செல்ல விரும்பினால், இந்த இரண்டு ஆண்டு காத்திருப்பு காலம் அவர்களது கரியரை பெரும் அளவில் பாதிக்கும்.
இந்தியாவில் H-1B விசா நேர்காணல் தேதிகள் 2027 வரை ஒத்திவைப்பு
