வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஃபெங்கல் புயலாக மாறி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கடலில் 8 முதல் 12 அடி உயரத்திலான ஆழமான அலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனால், சென்னை மெரினா கடற்கரை முதல் பட்டினப்பாக்கம் வரையிலான கடலில் பொதுமக்கள் இறங்கவும், குளிக்கவும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
பெங்கல் புயல் காரணமாக கடல் அலைகள் மிகவும் ஆக்ரோஷமாகவும், காற்றின் வேகம் அதிகமாகவும் காணப்படுகிறது.
மெரினா கடற்கரை பிரபல சுற்றுலா தலமாக இருப்பதால் பொதுமக்கள் கடலை ரசிக்க செல்லுவது வழக்கம். ஆனால் தற்போது பெங்கல் புயலின் தாக்கம் காரணமாக, சூறைக்காற்றும் மணலுடன் வீசுவதால் தற்போது கடற்கரைக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.