7ஆவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி நவம்பர் 10ஆம் நாள் ஷாங்காயில் நிறைவடைந்தது. புள்ளிவிபரங்களின்படி, நடப்பு பொருட்காட்சியில் அதிக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
இப்பொருட்காட்சியில் எட்டியுள்ள வர்த்தக தொகை 8001கோடி அமெரிக்க டாலராக இருந்து, கடந்த பொருட்காட்சியை விட 2விழுக்காடு அதிகமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 129 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 3496 நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன.
இவ்வற்றில், உலகின் முன்னணி 500 நிறுவனங்களும் பல்வேறு துறைகளில் முன்னணி தொழில் நிறுவனங்களும் பங்கெடுத்த எண்ணிக்கை கடந்த பொருட்காட்சிகளின் வரலாற்றில் மிக அதிக அளவில் பதிவானது. 186 நிறுவனங்கள் தொடர்ந்து 7முறை சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் பங்கெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 450புதிய தயாரிப்புகள், தொழில் நுட்பங்கள் மற்றும் சேவைகள் இப்பொருட்காட்சியில் மக்களின் பார்வைக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன.
நடப்பு பொருட்காட்சியில் வெளியிட்ட உலகின் திறந்த அளவுக்கான 2024ஆம் ஆண்டுக்கால அறிக்கையில், 2022 மற்றும் 2008ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் உலகின் திறந்த அளவுக்கான குறியீடுகள், 0.12விழுக்காடாகவும் 5.43விழுக்காடாகவும் குறைந்து, பதற்றமான நிலை காணப்பட்டதுடன், குறைந்து வரும் போக்கு மேலும் தெளிவாகியுள்ளது. ஆனால், 2008ஆம் ஆண்டை விட, 2023ஆம் ஆண்டில் சீனாவின் திறப்பு அளவுக்கான குறியீடு 11.89விழுக்காடு அதிகமாகும். அதன் அதிகரிப்பு அளவு உலகில் முன்னணி இடத்தில் வகிக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டது. இன்றைய உலகளாவிய சூழ்நிலையில், சீனா தொடர்ந்து திறப்பை விரிவாக்குவதற்கான முயற்சிகள் குறிப்பாக மதிப்புமிக்கவை.