சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருந்த நேபாளத் தலைமையமைச்சர் கட்க பிரசாத் சர்மா ஒலியுடன் டிசம்பர் 3ஆம் நாள் பிற்பகல் சந்திப்பு நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், சீனாவும் நேபாளமும் நட்பார்ந்த அண்டை நாடுகளாகவும் கூட்டாளி நாடுகளாகவும் திகழ்கின்றன. இரு நாடுகள் ஒன்றுக்கொன்று மதிப்பு மற்றும் ஆதரவு அளித்து, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை நிலைநிறுத்தி வருகின்றன என்றார். அடுத்த ஆண்டு, சீன-நேபாள தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவாகும். நேபாளத்துடன் பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்தி, சீன-நேபாள நெடுநோக்கு கூட்டாளி உறவு மேலும் பெரும் வளர்ச்சியைப் பெறுவதை முன்னேற்ற விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும், நேபாளத்துடன் பயனுள்ள ஒத்துழைப்புகளைத் தொடர்ந்து ஆழமாக்கி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தரக் கட்டுமானத்தைக் கூட்டாக முன்னேற்றி, நுழைவாயில், போக்குவரத்து, மின் இணைத்தொகுதி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள சீனா விரும்புகிறது. அத்துடன், ஐ.நா உள்ளிட்ட பலதரப்பு மேடைகளில் நேபாளத்துடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, வளரும் நாடுகளின் கூட்டு நலன்களைப் பேணிக்காக்கவும் சீனா விரும்புகிறது என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
ஒலி கூறுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமானத்தில் நேபாளம் தொடர்ந்து ஆக்கமுடன் பங்கெடுக்கும். மேலதிக சீனத் தொழில் நிறுவனங்கள் நேபாளத்தில் முதலீடு செய்து, பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்க விரும்புவதாக தெரிவித்தார். மேலும், ஒரே சீனா என்ற கோட்பாட்டை நேபாளம் உறுதியுடன் பின்பற்றி வருகிறது. சீனா முன்வைத்த உலக வளர்ச்சி முன்மொழிவு உள்ளிட்ட முக்கிய முன்மொழிவுகள், சிக்கலான சர்வதேச சூழ்நிலை மற்றும் உலகளாவிய அறைக்கூவல்களை மனித குலம் சமாளிப்பதற்குத் துணைப் புரியும் என்றும் அவர் கூறினார்.