சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சர்வதேச காணொளி செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்த 12ஆவது உலக காணொளி செய்தி ஊடக மன்றம் டிசம்பர் 3ஆம் நாள் ஃபுஜியன் மாநிலத்தின் ச்சுவான்சோ நகரில் நடைபெற்றது. 60க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 87 செய்தி ஊடகங்களிலிருந்து வந்த சுமார் 200 பிரதிநிதிகள் இம்மன்றத்தில் கலந்து கொண்டனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹை சியோங் கூறுகையில்,
உலகின் முதல் தரம் வாய்ந்த புதிய ரக செய்தி ஊடகங்களின் தொழில்நுட்பம் மற்றும் பரவல் மேம்பாட்டைப் பயன்படுத்தி, பரிமாற்றம், ஒத்துழைப்பு மற்றும் கூட்டுச் செழிப்புக்கான பாலத்தை உருவாக்க சீன ஊடகக் குழுமம் விரும்புகிறது. ஒத்த கருத்து கொண்டவர்களுடன் இணைந்து மனித குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகக் கட்டுமானத்தையும் மேலும் அருமையான மனிதக் குலத்தின் எதிர்காலத்தையும் முன்னேற்றுவதற்குச் சீன ஊடகக் குழுமம் பங்காற்றும் என்றார்.