ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் கடலூர்-புதுச்சேரி-சென்னை சாலையில் ஏற்பட்ட பாதிப்புகள் தற்போது சரி செய்யப்பட்டு, அந்த வழியில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
புயலினால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தால் கடலூரும், பிற கடலோர மாவட்டங்களும் பெரும் சேதத்துக்கு உள்ளாகின.
நீர்நிலைகள் நிரம்பி, வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
புயலின் பரவலான சேதங்களை சரி செய்ய நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடலூர்-புதுச்சேரி சாலையில் வெள்ளப்பாதிப்பால் சாலைகள் முழுவதுமாக சேதமடைந்த நிலையில் தற்போது போக்குவரத்து பாதிப்பு இருந்த கடலூர்-புதுச்சேரி சாலை தற்போது வழக்கம் போல் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சாலையில் ஆங்காங்கே சேதம் இருக்க வாய்ப்பு உள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.