சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் திடீர் உயர்வு

Estimated read time 1 min read

அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் பயணிகளிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுகிறது ஏரோ-ஹப் என்கிற தனியார் நிறுவனம்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையம், இந்தியாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாகும். இது தெற்காசியாவின் விமானப் போக்குவரத்தின் முக்கிய மையமாகக் கருதப்படுகிறது.

ஏனென்றால் நாளொன்றுக்கு 300க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன. வான்வழிப் போக்குவரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமான நிலையத்தில் உள்ள அடுக்குமாடி வாகனம் நிறுத்தும் இடத்தை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஏரோஹப் என்கிற தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்தது.

இந்த ஏரோ ஹப் நிறுவனம் சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிறகு பிக்கப்-பாயிண்ட் மாற்றம் டோல்கேட் வரி வசூல் அதனைத் தொடர்ந்து பார்க்கிங் வரி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கார் பார்க்கிங் வசூல் வேட்டை என்பது கட்டுக்கடங்காமல் வளர்ந்து விட்டது. இதற்கு முன்பு கார்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 80 ஆக இருந்தது, தற்போது ரூ. 85 ஆக அதிகரித்துள்ளது. அதைப்போல் கார்களுக்கு அதிகப்பட்சம் 24 மணி நேரத்திற்கு,ரூ. 525 ஆக இருந்தது, தற்போது ரூ.550 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெம்போ வேன்களுக்கு இதற்கு முன்பு குறைந்தபட்ச கட்டணம் ரூ.315 ஆக இருந்தது, தற்போது ரூ.330 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்கு கட்டணம் ரூ.1,050 ஆக இருந்தது, தற்போது ரூ.1,100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பஸ், லாரிகளுக்கான குறைந்தபட்ச கட்டணம்,ரூ.630 ஆக இருந்தது, தற்போது ரூ.660 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்கான கட்டணம் ரூ.2,100 ஆக இருந்தது, தற்போது ரூ.2,205 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்களும், கட்டண உயர்வில் தப்பவில்லை. 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை கட்டண உயர்வு இல்லாமல், பழைய கட்டணமான ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை ஏற்கனவே பழைய கட்டணம் ரூ.30. இப்போது புதிய கட்டணம் ரூ.35. இதற்கு முன்பு 24 மணி நேரத்திற்கான பழைய கட்டணம் ரூ.95. இப்போதைய கட்டணம் ரூ.100.

Please follow and like us:

You May Also Like

More From Author