திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் நேற்று கொடி நாள் தினத்தை முன்னிட்டு முன்னாள் இராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் மேனாள் வட்டாட்சியரும், முன்னாள் இராணுவ அதிகாரியுமான வ.முருகானந்தம் அவர்களை வந்தவாசி வட்டாட்சியர் இரா.பொன்னுசாமி தலைமையில் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்ட தமிழ் செம்மொழி மன்ற பொறுப்பாளர்கள் வி.எல்.ராஜன், கேப்டன் மு.பிரபாகரன், எக்ஸ்னோரா கிளை நிர்வாகிகள் மலர் சாதிக், தொடர்வண்டி தனசேகரன், வந்தை குமரன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேஷ், விஏஓ மணிகண்டன், ஏழுமலை மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.