அன்னையர் தினத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்கும் அவரது தாய்க்கும் இடையேயான கதையை அறிந்து கொள்வோம்.
குடும்பம் மற்றும் உறவினர்களுக்கு இடையேயான உறவுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகின்றார். 2017ஆம் ஆண்டுக்கான வசந்த விழாவைக் கொண்டாடியபோது ஷிச்சின்பிங் கூறுகையில், தொலை தூரத்தில் இருந்தாலும், அன்பை வெளிப்படுத்துவதை துண்டிக்கக் கூடாது, வேலை மும்முரத்தில் அன்பு செலுத்துவதை மறந்து விடக் கூடாது என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு குடும்பமும் நன்றாக இருந்தால் தான், ஒவ்வொரு தேசிய இனங்களும் வளர்ச்சி அடைய முடியும்.
தவிரவும், குடும்பக் கல்வி மீது ஷிச்சின்பிங்கின் தாயும் கவனம் செலுத்தினார்.
பெற்றோரை மிகவும் கவலையடையச் செய்வதே, குழந்தைகளின் எதிர்காலம் தான். குழந்தைகள் தவறு இழைத்தால், சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது என்று ஷிச்சின்பிங்கின் தாய் தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் அரசுத் தலைவர் பதவி ஏற்ற பின், அவரது தாய் உறவினர்களுக்காக கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், தனது இதர குழந்தைகள், ஷிச்சின்பிங்கின் துறையில் தொடர்பு கொண்டிருக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார். 2001ஆம் ஆண்டு, தனது வேலைப் பளு காரணமாக, ஷிச்சின்பிங் தனது தந்தையின் 88வது பிறந்தநாள் விழாவை தவறவிட்டார். அதே ஆண்டின் வசந்த விழாவின்போது, வேலை காரணமாக, அவரால் பொற்றோரைச் சந்திக்க இயலவில்லை. இருப்பினும், அவரது தாய் கூறுகையில், நீ நன்றாக வேலை செய்தால், நானும் அப்பாவும் மகிழ்ச்சி அடைவோம் என்று தெரிவித்தார்.
இன்றைய காலம் எவ்வளவு மாறினாலும், வாழ்க்கை முறை மாறினாலும், குடும்பத்தின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப கல்வி மற்றும் பாரம்பரியங்களின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.