‘சீனாவைப் புரிந்துகொள்ளுதல்’ என்னும் தலைப்பிலான 2024 ஆம் ஆண்டு சர்வதேச மாநாட்டிற்கு சீன அரசுத் தரைவர் ஷி ச்சின்பிங் வாழ்த்து கடிதத்தை அனுப்பினார்.
இக்கடிதத்தில், சீனாவைப் புரிந்து கொள்வதற்காக, சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குதல் மற்றும் சீனப் பாணியுடைய நவீனமயமாக்கலை முன்னெடுப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய சீனா உயர்தர சோசலிசச் சந்தை பொருளாதார அமைப்பு முறையை உருவாக்குவதை விரைவுபடுத்தி, அமைப்பு முறை சார்ந்த திறப்பை விரிவாக்கி, சர்வதேச உயர் நிலைப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக விதிகளுடன் இணைந்து, மேலும் வெளிப்படையான, நிலையான மற்றும் கணிக்கக்கூடிய அமைப்பு முறை சூழலை உருவாக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வாழ்த்து கடிதம், நவீனமயமாக்கலுக்கான பாதையில் உலகின் பிற நாடுகளுடன் கைகோர்த்து, மனிதகுல பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றுவதில், சீனாவின் மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளதாக இம்மாநாட்டில் கலந்து கொண்ட விருந்தினர்கள் தெரிவித்தனர்.
சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குதல் மற்றும் சீனப் பாணியுடைய நவீனமயமாக்கலை முன்னெடுத்தலின் மாபெரும் முக்கியத்துவத்தை இக்கடிதம் ஆழமாக அறிமுகப்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்ட அவர்கள், இது உலகத்துக்கு மேலதிக நிதானம் மற்றும் நேர்மறையான ஆற்றலை வழங்கி, நாடுகளிடையிலான ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு வலுவான ஒருமித்த கருத்தை உருவாக்கும் என்றும் கருத்து தெரிவித்தனர்.