ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலானது விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. விளை நிலங்களை வெள்ளம் சூழ்ந்ததால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர்.
இந்நிலையில் பாதிப்படைந்த பகுதிகளில் மத்திய உள்துறை பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் விக்கிரவாண்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் விவசாயிகளிடம் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.
அதனைத்தொடந்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மத்திய குழுவினர் கலந்துகொண்டு, பாதிப்பு நிலவரங்கள் குறித்து ஆட்சியரிடமும் கேட்டறிந்தனர்.